#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட இப்படிதா ஐரா டைட்டில் உருவானதா; இயக்குநரே சொன்ன தகவல பாருங்க.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் தனது 63ஆவது படமான ஐரா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும், இப்படத்தில் அவர் பவானி மற்றும் யமுனா என்று இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, கலையரசன், ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணன், மாஸ்டர் அஸ்வந்த், கலைப்புலி லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கான டைட்டில் இவ்வாறு தான் தேர்வு செய்யப்பட்டது என்று படத்தின் இயக்குனர் சர்ஜூன் தெரிவித்துள்ளார்: ஐராவதம் என்ற வார்த்தையின் சுருக்கம் தான் ஐரா. புராணத்தில் இந்திரனை சுமந்து செல்லும் யானையின் பெயர் தான் ஐராவதம். அறிவியலின் கருத்துப்படி பொதுவாக யானைகளுக்கு ஞாபகசக்தி அதிகமாக இருக்குமாம். இரு வேடங்களில் நடிக்கும் நயன்தாராவுக்கு ஒரு கதாபாத்திரத்திற்கு அதிக ஞாபகசக்தி இருக்குமாம். ஆகையால், எழுத்தாளர் ப்ரியங்கா ரவிந்திரன் தான் இப்படத்திற்கு ஐரா தான் சரியான டைட்டிலாக இருக்கும் என்று தேர்வு செய்தார் என்றார்.