#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வீட்டிற்குள்ளே முடங்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் வெளியிட்ட வைரலாகும் வீடியோ!
கொரோனா வைரஸால் மக்கள் வீட்டிற்குள்ளளே முடங்கியுள்ள நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியினர் டிக்-டாக் செய்துள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தற்போது மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்து வரும் நயன்தாரா கொரோனா வைரஸ் பாதிப்பால் எந்தவித படப்பிடிப்புகளிலும் கலந்துகொள்ளவில்லை. பிரதமரின் வேண்டுகோளின் படி இன்று வீட்டிற்குள்ளே இருந்துள்ளார்.
நயன்தாரா இன்று தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருவரும் ஒரே மாதிரியான பாவனை செய்து வீடியோ ஒன்றை எடுத்துள்ளனர்.
அந்த வீடியோவில் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றெல்லாம் புரியவில்லை. ஆனால் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வது ஒரு சிறந்த தருணம் என குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த சிலர் நாடு இருக்கும் நிலைமையில் இது தேவையா என கேட்டுள்ளனர்.
Self-isolation and yes Quality time👫 #QuarantineLife pic.twitter.com/hI9HiWJSWE
— Nayanthara✨ (@NayantharaU) March 22, 2020