#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
2.0 படத்தை நயன்தாரா எங்கு பார்த்துள்ளார் தெரியுமா? புகைப்படம்!
பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் அணைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது 2.0 திரைப்படம்.
மேலும் அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் 2.0 என்பது குறிப்பிடத்தக்கது. படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய்குமார் என பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் 2.0 படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழ் பிரபலங்கள் பலரும் நேரடியாக திரை அரங்கிற்கே சென்று 2.0 படத்தினை பார்த்து ரசித்து வருவதோடு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 2.0 படத்தை நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை சத்யம் திரையரங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த ரசிகர்களுடன் அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.