வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
"விஜயகாந்த் உடல்நலம்! விஜய்க்கு நன்றியுணர்ச்சி இல்லையா!" அதிருப்தியில் ரசிகர்கள்!
தமிழ் திரையுலகில் புரட்சிக்கவிஞர் என்றும், கருப்பு எம் ஜி ஆர் என்றும், கேப்டன் என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். 1979ம் ஆண்டு "இனிக்கும் இளமை" என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானார்.
1981ம் ஆண்டு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய "சட்டம் ஒரு இருட்டறை" படத்தில் கமர்ஷியல் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தேசபக்தியை வெளிப்படுத்தும் படங்களில் நடித்து வந்த விஜயகாந்த், தேமுதிக கட்சியைத் தொடங்கி 2011 - 2016 வரை தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.
நிஜ வாழ்க்கையிலும் பொதுமக்களுக்கும், சக கலைஞர்களுக்கும் ஏராளமான உதவிகள் செய்துள்ளார். மேலும் தற்போது தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஹீரோவாக இருக்கும் விஜயின் ஆரம்ப காலங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்து, தன்னுடைய படங்களில் நடிக்க வைத்தவர் விஜயகாந்த்.
வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து தூக்கி விட்ட விஜயகாந்த் தற்போது உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார். பல்வேறு தரப்பினரும் அவருக்காக பிரார்த்தித்து வரும் நிலையில் நடிகர் விஜய் ஒரு சின்ன ட்வீட் கூட போடாதது ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.