#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமையே நீங்களுமா இப்படி! நடிகை ராதிகாவிற்கு வந்த புது சோதனை! பெரும் வருத்தத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. மேலும் 70 மற்றும் 80களில் ஏராளமான படங்களில் நடித்து அவர் முன்னணி நடிகையாக ஜொலித்தார். மேலும் அவர் பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகையாக நடிக்க தொடங்கினர். பின்னர் சின்னத்திரையில் களமிறங்கி சித்தி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி போன்ற சீரியல்கள் மூலம் மக்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது ராதிகா காதல் மன்னன், அமர்களம் ,வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய சரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மார்க்கெட் ராஜா MBBS என்ற படத்தில் நடித்துள்ளார். அதில் பிக்பாஸ் ஆரவ் கதாநாயகனாக நடிக்க, வடசென்னையின் பெண் ரவுடியாக நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.
மேலும் இந்த படம் வரும் 29 ஆம் தேதி ரிலீசாக உள்ளநிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகை ராதிகா சரத்குமார் வாயில் சிகரெட்டை வைத்துள்ளது போன்று காட்சி இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வு இயக்கம், விதிகளை மீறி, ராதிகா புகைப்பிடிப்பது
போன்ற புகைப்படங்களை வெளியிட்டது தவறு, எனவே உடனடியாக, அனைத்து தளங்களிலிருந்தும் விளம்பர புகைப்படங்களை நீக்கவேண்டும் என நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.மேலும், இதுகுறித்து ஏழு நாட்களுக்குள் ராதிகா பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.