#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மிஸ்டர் லோக்கல் படத்திற்கு எப்படியெல்லாம் லோக்கலாக விளம்பரம் செய்ராங்க பாருங்க!
சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இந்த படம் வரும் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான சீமராஜா திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இருவரும் 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து Mr . லோக்கல் படத்தில் நடித்துள்ளனர்.
இயக்குனர் ராஜேஷின் படங்கள் அனைத்தும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் படங்களாகவே இருக்கும் என்பதால் இந்த படமும் நகைச்சுவை சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போலவே சில நாட்களுக்கு முன்பு ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மே 17ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் ப்ரமோசன் வேலைகளை படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இருவருக்குமே தமிழகத்தில் ஏரளாமான ரசிகர்கள் இருப்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் நம்பிக்கையில் படக்குழு விளம்பரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
வெறும் டிவி சேனல்கள், சமூகவலைதளங்களில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் அதிகமாக கூடும் அனைத்து பேருந்து நிலையங்களில் உள்ள டிவிக்களிலும் மிஸ்டர் லோக்கல் படத்தின் ட்ரெய்லர் ஒளிப்பரப்படுகிறது. இதன் மூலம் அனைத்து விதமான மக்களையும் கவரும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது.
😉#MrLocal offline promotions are in full swing. Promos telecasted in Entire TN Busstand. All set to grand release on May 17.#MrLocalOnMay17@Siva_Kartikeyan #Nayanthara @rajeshmdirector @actorsathish @iYogiBabu@SF2_official @DoneChannel1 @malikstreams @thinkmusicindia pic.twitter.com/60v2dngvyQ
— Studio Green (@StudioGreen2) May 11, 2019