பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
முதலிரவு அறையில் நுழைந்த பாம்பு; ஆடிப்போன ஜெய், கேத்தரின்தெரசா பயங்கர திகிலுடன் வெளியான நீயா2 புரோமோ வீடியோ.!
நடிகர் ஜெய் தளபதி விஜய் நடித்த பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக அறிமுகமானார். பகவதி படம் சினிமா துறையில் ஜெய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து சென்னை 28 படம் மூலம் ஒரு ஹீரோவாக அவதாரம் எடுத்து, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாக உள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் எல்.சுரேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெய், கேத்ரீன் தெரசா, லக்ஷ்மி ராய், வரலக்ஷ்மி, ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நீயா 2. படம் முழுவதும் பாம்பின் பழி வாங்கும் எண்ணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இதில் நடிகர் ஜெய், கேத்தரின்தெரசா இருவரும் முதலிரவு காட்சியில் தோன்றுகின்றனர். அவர்களின் ரொமான்ஸ்க்கு இடையே உள்ளே புகுந்த பாம்பை கண்டு இருவரும் ஆடி போகின்றனர். இதனால் இப்படம் முழுவதும் திகில் காட்சிகள் நிறைய இடம் பெற்றிருக்கும் என்பது தெரிய வருகிறது.