கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கல்லூரி மாணவி விடுதியில் திடீர் தற்கொலை; கோவையில் சோகம்.!
பாலிடெக்னீக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி, தற்கொலை செய்துகொண்டார்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் வசித்து வருபவர் அசோக்குமார். இவரின் மகள் கனகவள்ளி (வயது 19). கல்லூரி மாணவியான கனகவள்ளி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் பாளையம் பகுதி விடுதியில் தங்கியிருக்கிறார்.
இதையும் படிங்க: வீட்டிற்கு வந்ததும் அம்மா மகனை காணக்கூடாத காட்சி; நெஞ்சம் பதறும் சம்பவம்.!
கனகவள்ளியின் சகோதரியும் விடுதியில் தங்கியுள்ள நிலையில், அங்கு இருந்தவாறு தினமும் நேதாஜி நகரில் செயல்பட்டு வரும் பெண்கள் பாலிடெக்னீக் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை தனது அறைக்கு வந்தவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இதனிடையே, அறையில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தோழிகள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த விசயம் குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர், கனகவள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியை பலாத்காரம் செய்ததாக அவதூறு; ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை.!