#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவர் தோளில் சாய்ந்து.. நடிகை நிரோஷா வெளியிட்ட அழகிய புகைப்படம்! குவியும் லைக்ஸ்கள்!!
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிரோஷா. அதனைத் தொடர்ந்து அவர் சூரசம்ஹாரம், செந்தூரப்பூவே, பாண்டி நாட்டு தங்கம், மருதுபாண்டி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், சின்ன பாப்பா பெரிய பாப்பா, சந்திரகுமாரி, வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.
நிரோஷாவின் தந்தை எம்.ஆர் ராதா. சகோதரி ராதிகா. இருவருமே நடிப்பில் தங்களுக்கென தனி முத்திரையை பதித்துள்ளனர். நடிகை நிரோஷா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அம்மாவாக நடித்து வருகிறார்.
நிரோஷா செந்தூரப்பூவே திரைப்படத்தில் தன்னுடன் நடித்த ஹீரோ ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அழகிய ஜோடியாக வலம் வருகின்றனர். இந்நிலையில் தற்போது நிரோஷா தனது கணவரது தோளில் சாய்ந்தவாறு இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில்," மகிழ்ச்சிக்கு பாதை இல்லை; மகிழ்ச்சியே பாதை" என பதிவிட்டுள்ளார் அது வைரலாகி வருகிறது.