#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இரண்டாம் திருமணம் செய்யவிருக்கும் நந்தினி சீரியல் நடிகை! மாப்பிள்ளை யார் தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான தொடர் தான் நந்தினி. இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நித்யா ராம். இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார் நித்யா ராம். ஆனால் இவர் இதற்கு முன்பு தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி சீரியல் தொடர்களில் நடித்து பிரபலமானவர்.
தற்போது நந்தினி சீரியல் வெற்றியை தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நித்யா ராமுக்கு அடுத்த மாதம் இரண்டாம் திருமணம் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இதற்கு முன்பு வினோத் கௌடா என்பவரை திருமணம் செய்து பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரித்துள்ளனர்.
அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நித்யாவுக்கு ஆஸ்திரேலிய தொழிலதிபருடன் காதல் ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் அடுத்த மாதம் 5 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.