#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நண்பருடன் காதல் திருமணமா.? நித்யா மேனன் பற்றி வெளியான செய்தி.!
கேரளாவைச் சேர்ந்த நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு வெளியான "வெப்பம்" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து, இவர் மேலும் ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை, ராகவா லாரன்சுடன் காஞ்சனா- 2, ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் என முன்னணி நடிகர்களுடனும், இயக்குனர்களுடனும் இணைந்து பணியாற்றிய முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
பிறகு, அவருக்கு திடீரென உடல் எடை கூடியதால், பட வாய்ப்புகள் குறைந்தது. அதன்பிறகு அவர் உடல் எடையைக் குறைத்து, பிறகு தனுசுடன் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மிகப்பெரிய ஹிட்டானது. இதைத்தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகளும் குவியத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், நித்யா மேனன் மலையாள நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் வருகின்றன. இவர் நித்யா மேனனின் பள்ளிப்பருவ நண்பர் என்றும் கூறினார்.