#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னை பத்தி தப்பா பேசினா.. அதை வெளியிடுவேன்! மகளுடன் தாடி பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்த மனைவி நித்யா! வீடியோ இதோ!!
விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மேலும் இருவரும் பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இருவரும் சேர்வது போல சென்று பின்னர் வெளியேறியதும் மீண்டும் பிரச்சினையை தொடர்ந்தனர்.
இந்த நிலையில் பாலாஜி தற்போது மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது பாலாஜி தனது மகளை பிரிந்திருப்பதை குறித்து பேசியுள்ளார். இந்த நிலையில் பாலாஜியின் மனைவி நித்யா தன்னை குறித்து தவறாக பேசி இமேஜை டேமேஜ் செய்வதாக புகார் கூறி லைவ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், பாலாஜி பிக்பாஸ் அல்டிமேட்டில் எனது கேரக்டரை அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார். இனிமேலும் தப்பா பேசினால் அவர் மிகவும் அசிங்கமாக திட்டிய வாய்ஸ் மெசேஜை வெளியிடுவேன். மேலும் எனது மகள் போஷிகாவை அசிங்கமாக திட்டி பேசிய ஆடியோவும் என்னிடம் உள்ளது.
குடித்துவிட்டு அவரது டிரைவரை என்னை போனில் அசிங்கமாக திட்ட வைத்துவிட்டு, அருகில் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருந்த ஆடியோவும் உள்ளது. இனிமேலும் அவர் என்னை தவறாக பேசினால் அதனை ஒவ்வொன்றாக யூடியூப்பில் வெளியிடுவேன் என கூறியுள்ளார். மேலும் போஷிகாவும், நீங்க மீடியாவுக்காக இப்படி நடிக்காதீர்கள். எது நல்லது எது கெட்டது என எனக்கு தெரியும் அளவிற்கு மெச்சூரிட்டி வந்துவிட்டது என பல கருத்துக்களை கூறியுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.