பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடஅட.. என்னா லுக்குமா! நீல நிற உடையில் கிளாமராக கிளுகிளுப்பூட்டும் நிவேதா பெத்துராஜ்!!
தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதனை தொடர்ந்து அவர் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன், ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் , உதயநிதி ஸ்டாலினின் பொதுவாக என் மனசு தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்திருந்த பொன் மாணிக்கவேல் படம் அண்மையில் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும் அவர் தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் தற்போது அவர் இரத்த மேரி , விரத பர்வம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இதற்கிடையில் நிவேதா பெத்துராஜ் சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் வித்தியாசமான உடை அணிந்து கலர்ஃபுல்லாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் தற்போது நீல நிற உடை அணிந்து கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.