#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் இணைந்து நடிக்கவுள்ள பழைய காதல் ஜோடிகள்..!
பழைய காதல் ஜோடிகளான சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் இதற்கு முன்பு வல்லவன், இது நம்ம ஆளு ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்கள் இணைந்து நடித்த முதல் படமான வல்லவன் படத்தில் தான் இருவருக்கு இடையே காதல் ஏற்ப்பட்டு நெருங்கி பழக ஆரம்பித்தனர்.
அச்சமயத்தில் இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. ஆனால் அதன்பின் இருவரும் தங்களது காதலை முறித்து கொண்டனர். பின்னர் நயன்தாரா பிரபு தேவா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவர் மீதும் காதல் வளர்த்தார்.
இந்நிலையில் பழைய காதல் ஜோடிகளான சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் புதிய ஒரு படத்தில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.