#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"நான் குடிகாரியாக மாறியதற்கு என் முதல் கணவர் தான் காரணம்" மனம் திறந்த நடிகை ஊர்வசி.?
தமிழ் திரையுலகில் பன்முக திறமைகளை கொண்ட நடிகை ஊர்வசி. நடிகையாகவும், எழுத்தாளராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், டப்பிங் கலைஞராகவும் வலம் வந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே மற்றுமொரு நடிகரான மனோஜ் கே ஜெயம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தானது. இதன் பிறகு 2013 ஆம் வருடம் சிவப்பிரசாத் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் ஊர்வசி அளித்த பேட்டியில் "என் வாழ்க்கை இப்படியானதற்கு என் முதல் கணவர் தான் காரணம். அவர் மற்றும் அவரது குடும்பத்தார்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள். என்னையும் குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள்.
மேலும் குடிகாரி என்று கூறி என்னையே வீட்டை விட்டு துரத்து விட்டார்கள். பின்பு தான் நான் இவரை திருமணம் செய்து கொண்டு தற்போது நன்றாக இருக்கிறேன். என் வாழ்க்கை இப்பொழுது தான் நன்றாக செல்கிறது" என்று மனம் திறந்து பேட்டியில் பேசியிருக்கிறார்.