#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆஸ்கார் விருது வென்ற தமிழனின் குறும்படம்; குவியும் பாராட்டுகள்.!
ப்ரீயட். தி என்ட் ஆஃப் சென்டென்ஸ் என்று இந்திய குறும்படம் ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தேர்வாகி ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.
திரைத்துறையில் சிறந்த படைப்புகளாக கருதப்படும் படங்களுக்கு தற்சமயம் ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் மாதவிடாய் பற்றி உருவாக்கப்பட்ட ப்ரீயட். தி என்ட் ஆஃப் சென்டென்ஸ் (மாதவிடாய். வாக்கியம் முற்றுப்பெறுகிறது) என்கிற இந்தியாவில் தயாரான ஆவணப்படம், 2019 ஆஸ்கார் விருதுக்கான குறு ஆவணப்படப் பிரிவில் விருது வென்று பெருமையை தேடித் தந்துள்ளது.
Best Documentary Short #Oscars winner #PeriodEndofSentence was filmed in #India
— Ramesh Bala (@rameshlaus) February 25, 2019
A documentary that tackles the stigma around menstruation in rural India, is currently available for streaming on Netflix pic.twitter.com/XgG9HJHrpj
கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்களை குறைந்த விலையில் அதே சமயம் தரமாகவும் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தை கண்டுபிடித்தார்.
இவருடைய இந்த கண்டுபிடிப்பை பல நிறுவனங்கள் விலைக்கு வாங்க முன்வந்தனர். ஆனால் யாருக்குமே அதனை விற்காமல் அந்த இயந்திரத்திற்கான காப்புரிமை பெற்று அதன்மூலம் உற்பத்தியாகும் நாப்கின்களை பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களைக் கொண்டு அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தார். மேலும் இப்படத்தின் முக்கிய காட்சிகளிலும் தோன்றி நடித்துள்ளார் அருணாசலம் முருகானந்தம்.
Well played! #periodendofsentence pic.twitter.com/hWIGxThLYt
— hclark4 (@hclark4) February 25, 2019
இவரது முயற்சியை கருப்பொருளாக வைத்து ‘Period. End of Sentence’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தை சர்வதேசளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இந்திய-ஈரானிய திரைப்பட இயக்குநர் ராய்கா ஜேடாப்ச்சி இயக்கியுள்ளார். இந்த ஆவணப் பட டிரெய்லரில் இந்தியாவின் ஊரகப் புறத்தில் வசிக்கும் பெண்கள் பலர், மாதவிடாய் காலங்களில் இன்னமும் துணிகளை மட்டுமே பயன்படுத்தும் உண்மை தெரிவிக்கிறது. மேலும், மாதவிடாய் என்றால் என்ன என்றே தெரியாத ஆண்களின் மனநிலையையும் பதிவு செய்துள்ளது.
இதனால் இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருதை வென்ற இப்படத்தின் படக்குழுவினருக்கு பலதரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.