#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எனக்கு அத பத்தி எதுவும் தோணல" உண்மையை போட்டு உடைத்த ஓவியா!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் பிரபலமாகிவிட்டனர்.
இதில் கலந்து கொண்ட ஆரவ் பிக்பாஸில் வெற்றியடைந்தார். மேலும் பிக்பாஸில் இருக்கும்பொழுது ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் காதலித்து வந்தார்கள், இந்த காதலையும் தாண்டி இவர்கள் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் ஓவியா, ஆரவ் உடன் நெருங்கி பழகி வருவதால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் தனியாக இவரும் வசித்து வருகிறார்கள் என்றும் பல்வேறு வதந்திகள் பரவுகின்றன. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஓவியா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
"ஆரவ் என் நண்பர், எனக்கு ஆதரவாக இருக்கிறார். அது தவிர எனக்குக் கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது. அது வேண்டாம்னு நினைக்கிறேன். ஆனா, வாழ்க்கை நம்மை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்னு தெரியாது.
நான் சின்ன வயதில் இருந்தே சுதந்திரமா வளர்ந்த பொண்ணு. தன்னிச்சையா செயல்படுவேன். அதனால, கல்யாணம் எனக்கு எந்தவிதத்துல செட் ஆகும்னு தெரியலை. தவிர, எனக்கு ஒருத்தரோட சப்போர்ட் வேணும்னு இப்போ வரைக்கும் தோணல” என்று ஓவியா தெரிவித்துள்ளார்.