#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஓவியா? ஏற்பார்களா ரசிகர்கள்?
களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலையே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. களவாணி படத்தை தொடர்ந்து ஒருசில படங்களில் நாயகியாக நடித்த ஓவியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை கொடுத்தது விஜய் தொலைக்காட்சி.
தனக்கு கொடுத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனங்களை கொல்லைகொண்ட ஓவியாவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆர்மி அமைத்து அவரை கொண்டாடினர்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார் ஓவியா. தற்போது 90 ml என்ற அடல்ட் ஒன்லி படத்தில் நடித்துள்ளார் ஓவியா. படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஓவியா. 90 எம்.எல் திரைப்படம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாக உள்ளது.
படம் வெளியாகும் முதல் நாள் ரசிகர்களுடன் சேர்ந்து அதிகாலை சிறப்பு காட்சியைப் பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார் ஓவியா. ஓவியாவின் அழைப்பை ஏற்பார்களா ரசிகர்கள். பொறுத்திருந்து பாப்போம்.