பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட.. பகல் நிலவு ஹீரோவின் தம்பியா இது! அச்சு அசல் அவரை மாதிரியே இருக்காரே! தீயாய் பரவும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பகல்நிலவு என்ற சீரியலில் ஹீரோவாக, அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் முகமது அஷீம். இத்தொடரில் அவருக்கு ஜோடியாக ஷிவானி நடித்திருந்தார். அந்த ஜோடிக்காகவே சீரியல் பார்த்தவர்கள் ஏராளம்.
அதனை தொடர்ந்து அஷீம் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்திருந்தார். மேலும் ஷிவானியுடன் டான்ஸ் ரியாலிட்டி ஷோவிலும் கலந்துகொண்டார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவிருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அவரால் பங்கேற்கமுடியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அஷீம் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஷிவானியுடன் ஏற்பட்ட காதல் காரணமாகதான் அவர் மனைவியை விவாகரத்து செய்தார் என தகவல்கள் பரவியது. ஆனால் அப்படியெதுவுமில்லை என அஷீம் விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில் அஷீம் தனது தம்பி முகமது அடில்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் அஷீமின் தம்பி பார்ப்பதற்கு அச்சு அசலாக அவரை போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்.