வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
பகல் நிலவு சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? முதன்முதலாக வெளியான கியூட் புகைப்படம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த தொடர் பகல் நிலவு. இத்தொடரில் ஆரம்பத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் அன்வர் மற்றும் சமீரா ஷெரிப். ரியல் காதல் ஜோடியான இருவரும் அதனைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளில் பல தொடர்களில் நடித்துள்ளனர்.
நீண்ட வருடங்களாக காதலித்து வந்த அன்வர் மற்றும் சமீரா இருவரும் கடந்த ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமீரா தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்திருந்தார்.
மேலும் கர்ப்பகால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வந்தார். இந்நிலையில் சமீராவுக்கு அண்மையில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அன்வர் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது பெருமளவில் வைரலான நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.