செல்போனால் பறிபோன உயிர்.!! பெயிண்டருக்கு நேர்ந்த கோர முடிவு.!!
கன்னியாகுமரி அருகே திருநெல்வேலியை சேர்ந்த பெயிண்டர் செல்போன் வெடித்து சிதறியதில் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெயிண்டராக வேலை பார்த்த இளைஞர்
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் செல்வ சதிஷ். 26 வயதான இவர் பெயிண்ட்ராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பெயிண்டிங் வேலை செய்வதற்காக கன்னியாகுமரி அருகே உள்ள ஆளூர் என்ற பகுதியில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி இருக்கிறார்.
சார்ஜ் போட்ட செல்போன் வெடித்ததால் பலி
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வந்த செல்வ சதிஷ், மது போதையின் காரணமாக தனது செல்போனை மெத்தைக்கு அருகே சார்ஜ் போட்டுவிட்டு உறங்கி விட்டார். அப்போது சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்போன் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி இருக்கிறது. இதனால் மெத்தையிலும் தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில் உறங்கிக் கொண்டிருந்த செல்வ சதிஷ் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
இதையும் படிங்க: மதுரையில் பயங்கரம்... சாலையில் வீசப்பட்ட தலை.!! கொலையாளிகள் யார்.? பரபரப்பு விசாரணை.!!
காவல்துறை விசாரணை
இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த செல்வ சதிஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்போன் வெடித்த விபத்து குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். செல்போன் வெடித்து சிதறியதில் பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: திருச்சியில் சோகம்... கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்.!! மாணவன் பலி.!!