#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிஎஸ்கே இளம் கிரிக்கெட் வீரருடன் காதல்?? உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி இனியா!!
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நேஹா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். நேஹா முதன்முதலில் பைரவி என்ற சீரியலில்தான் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பிள்ளை நிலா, வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
அதிலும் வாணி ராணி தொடரில் இவர் நடித்த தேனு கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானது. பின்னர் பல தொடர்களிலும், வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்த நேஹா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேஹா சிஎஸ்கே கிரிக்கெட் வீரரரான பதிரனாவை காதலிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது குறித்து பேட்டி ஒன்றில் நடிகை நேஹா, எனக்கு பொதுவாகவே கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் கிடையாது. ஒருமுறை ஷூட்டிங்கில் எனது அருகில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தவர் பதிரனாவை பற்றி கூறினார். அப்பொழுது அவர் போட்ட இன்ஸ்டா ஸ்டேட்டஸை நானும் ஸ்டோரியில் ஷேர் செய்தேன். உடனே நான் பதிரனாவை காதலிப்பதாக சர்ச்சைகள் பரவியது. நானும் ஜாலியாக இருக்குனு விட்டுவிட்டேன். ஆனால் அவரை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது.என்னுடைய வாழ்க்கையில் ஒரு காதல் தோல்வி இருப்பது உண்மைதான். அதனால் நான் நொறுங்கி கண்ணீர் விட்டு அழுதேன் என கூறியுள்ளார்.