#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
செம.. வேற லெவல்! சஞ்சீவ் - ஆலியாவின் அந்த பாடலுக்கு அசத்தலாக ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் கார்த்திக், செம்பாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. சீரியலில் கணவன், மனைவியாக நடித்த இருவரும் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
அழகிய காதல் ஜோடியாக வலம் வரும் அவர்களுக்கு ஐலா என்ற மகன் உள்ளார்.
ஆலியா மானசா தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இருவரும் தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குழந்தையின் புகைப்படங்களை அவ்வபோது வெளியிடுவர். இந்நிலையில் சமீபத்தில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் இணைந்து காத்தாடி என்ற பாடலுக்கு நடித்து நடனமாடியிருந்தனர். மேலும் அந்த வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அந்த பாடலுக்கு அண்மையில் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெனிஃபர் நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.