#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாண்டியன் ஸ்டோர் மருமகள்களுக்கு இடையில் வெடித்த சண்டை, வெளியேறும் முக்கிய பிரபலம்.!- காரணம் என்ன தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியின் விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் "பாண்டியன் ஸ்டோர்".கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது இந்த சீரியலில் பலவிதமான நடிகை, நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இதில் கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் நடத்திவரும் ஒரு கடை, அவர்களுக்கு நடக்கும் சம்பவங்கள் தான் சீரியலில் காட்டப்படுகிறது.
மேலும் இந்த சீரியலில் மூத்த மருமகளாக சுஜாதாவும், இளைய மருமகளாக சித்ராவும் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளதாம்.
அதற்கு முக்கிய காரணம் விஜய் டிவியில் நடத்திய விருது விழா நிகழ்ச்சியில் சிறந்த நடிகை காண நாமினேஷன் லிஸ்டில் "சித்ரா" பெயர் இடம்பெற்றிருந்தது.ஆனால் சுஜாதாவுக்கு சப்போர்ட் கேரக்டர் விருது மட்டுமே கொடுக்கப்பட்டது.
சுஜாதாவுக்கு சீரியலில் தான் ஹீரோயின் என நினைத்து வந்த நிலையில், இந்த விருதின் மூலம் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே விரைவில் அவர் இந்த சேவையை விட்டு வெளியேறினாலும் ஆச்சரியமில்லை என்று நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.