பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இதை என்னனு சொல்றது! பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் ஜோடியாக வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. அவ்வாறு அண்ணன்- தம்பிகள் பாசம், கூட்டுக்குடும்பம் ஆகியவற்றை பின்னணியாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப தொடரான இதற்கு மக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி தம்பியாக, வீட்டின் கடைக்குட்டியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்தவர் சரவணவிக்ரம். இவர் தொடரில் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடித்தவர் விஜே தீபிகா. சில காரணங்களால் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து வெளியேறினார்.
ஆனாலும் சரவணவிக்ரம் மற்றும் தீபிகா இருவரும் அவ்வப்போது ஒன்றாக எடுத்த ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் சுற்றுலா சென்ற புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இருவரும் நடனமாடி வீடியோ எடுத்துள்ளனர். அதனை தீபிகா 'இதை டான்ஸ் வீடியோ என சொல்ல ஆசைதான், ஆனால் எனக்கே மனசு உறுத்துது. பேசாமல் ரிகர்சல் என சொல்லலாமா' என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார்.அது வைரலாகி வருகிறது.