பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என்னது.. இவருக்கா! விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்! உருக்கமாக அவரது தங்கை வெளியிட்ட பதிவு!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று நாளுக்குநாள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்றுகொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, குமரன் மற்றும் காவியா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தத் தொடரில் கடைக்குட்டி பையனாக, சுட்டித்தனமான கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவண விக்ரம்.
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் குடும்பத்திற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொள்வது, குடும்பத்தில் விரிசல் ஏற்படுவது என தற்போது அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் சஇந்த காட்சிகள் படமாக்கப்பட்ட போது அவர் வாகனம் ஓட்டும் போது சிறிய விபத்தில் சிக்கியுள்ளதாக சரவண விக்ரமின் சகோதரி சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்ட பதிவில்,
உடல் முழுவதும் கடுமையான வலியுடன் 4 மணி நேரத்திற்குள் மீண்டும் படப்பிடிப்புக்குச் சென்றார். தனது வலியைக் கூட அவர் தனது குழுவினரிடம் காட்டிக் கொள்ளவில்லை. என் சகோதரரின் மன உறுதியை கண்ட பிறகு நான் அவரை நினைத்து மிகவும் பெருமைப்பட்டேன். அவரை என்றும் ஊக்கப்படுத்துங்கள். உங்களது எல்லையற்ற அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி என உருக்கமாக கூறியுள்ளார்.