பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடேங்கப்பா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குட்டி கண்ணனுக்கு இம்புட்டு அழகான தங்கச்சியா!! வைரலாகும் ரியல் குடும்ப புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்ப வாழ்க்கையை, அண்ணன்-தம்பி பாசத்தை மையமாகக்கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் ஸ்டாலின், சுஜித்தா,வெங்கட், ஹேமா,குமரன், காவியா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மேலும், இந்த தொடரில் வீட்டின் கடைக்குட்டியாக, துறுதுறுவென இருக்கும் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணகுமார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் தற்போதுதான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவருக்கென தனியாக லவ் ட்ராக் சென்று கொண்டுள்ளது.
இந்த நிலையில் கண்ணன் தனது உண்மையான குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது தங்கையின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், அட நம்ம கடைக்குட்டி கண்ணனுக்கு இவ்வளவு அழகிய தங்கச்சியா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.