#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கையில் மைக்குடன் என்னவொரு கெத்து! வித்தியாசமான டைட்டிலுடன் வைரலாகும் நடிகர் சந்தானம் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் தனது காமெடியால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் சந்தானம். பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்த அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இவ்வாறு சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், தாரா அலிசா பெர்ரி நடிப்பில் வெளியான படம் ஏ1. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் சந்தானம் மீண்டும் ஜான்சன் கே இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இதில் அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
Bacha Bachike Namaste 🙏🏻😃#ParrisJeyaraj#JohnsonK @Music_Santhosh @kumarkarupannan #LarkStudios @ArthurWisonA @iamsandy_off #AnaikaSoti @Sastika_R @proyuvraaj#A1Combo’SNext pic.twitter.com/fkklZzWkGC
— Santhanam (@iamsanthanam) December 1, 2020
இப்படத்தை லார்க் ஸ்டியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஆர்தர் கே.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இந்நிலையில் தற்போது பாரிஸ் ஜெயராஜ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியாகி வைரலாகி வருகிறது.