பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அமலாபாலின் ஆடை படம் இந்த படத்தோட காப்பியா? நடிகர் பார்த்திபன் போட்டுடைத்த ரகசியம்!!
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் அமலாபால். இவர் மைனா திரைப்படம் மூலம் பெருமளவில் பிரபலமாகி ஓரிரு படங்களிலையே முன்னணி நடிகையாக அவதாரம் எடுத்தார்.
விஜய், விக்ரம், ஆர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த இவர் பிரபல இயக்குனர் AL விஜய் அவர்களை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து ஓரிரு வருடங்களிலையே இருவரும் விவாகரத்து பெற்று, விஜய் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அமலாபால் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள படம் ஆடை. த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தில், தொகுப்பாளினி ரம்யா, பிஜிலி ரமேஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்பம் தான் இயக்கி வெளிவந்த ஒரு படத்தின் காப்பி என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் PRANKly speaking-ஆடை படத்தின் மூலக்கருவான Prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின்கூட்டியே மாற்றி 2004- 'குடைக்குள் மழை'வந்தது. வன்மையான கண்டனத்திற்கு + தண்டனைக்குரியது! 15 years பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த Prank-ஐ இன்னும் (eve teasing-ஐ விட கொடுமை) ஒழிக்காமல் இருப்பது. என கூறியுள்ளார்.
PRANKly speaking-ஆடை படத்தின் மூலக்கருவான Prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின்கூட்டியே மாற்றி 2004- 'குடைக்குள் மழை'வந்தது
— R.Parthiban (@rparthiepan) 21 July 2019
வன்மையான கண்டனத்திற்கு + தண்டனைக்குரியது! 15 years பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த Prank-ஐ இன்னும்
(eve teasing-ஐ விட கொடுமை)
ஒழிக்காமல் இருப்பது pic.twitter.com/JuHxPQkAzB