என்னது.. பாவம் கணேசன் சீரியல் நடிகைக்கு கல்யாணமாகிருச்சா! அவரது கணவர் யார்னு பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படங்கள்!!



pavam-ganeshan-serial-actress-neha-with-husband-photo-v-TWBKH7

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.  அவ்வாறு மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் தொடர்களில் ஒன்றுதான் பாவம் கணேசன்.

இதில் கணேசன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக KPY நவீன் நடித்து வருகிறார். மேலும் கதாநாயகியாக நடிகை நேஹா நடித்து வருகிறார். நேஹா கன்னட சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து சன் டிவியில் கல்யாண பரிசு என்ற தொடரில் நடிதது மக்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் தற்போது பாவம் கணேசன் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

neha

தற்போது சீரியலில் பிஸியாக நடித்து வரும் நேஹா 2018ஆம் ஆண்டு சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் காதல் திருமணமாம். இவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்துள்ளனராம். திருமணத்திற்கு பிறகு அவரது கணவரின் சம்மதத்துடன் தற்போது நேஹா சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேஹா அவரது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

neha