அச்சோ.. அமீருக்கு இப்படியொரு பிரச்சினையா.! திருமண புகைப்படத்தை பகிர்ந்து பாவனி உடைத்த உண்மை! ஷாக்கில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்தவர் பாவனி. அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளரான அமீர் அவருக்கு ப்ரபோஸ் செய்தார். ஆனால் அதற்கு பாவனி எந்த பதிலும் அளிக்கவில்லை.
பிறகு இருவரும் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்துகொண்டு அசத்தலாக நடனமாடி வருகின்றனர். அங்கும் அமீர் பாவனிக்கு தொடர்ந்து தனது காதலை கூறிகொண்டே இருந்தநிலையில் அதனை ஏற்றுக்கொள்ளாமல தயங்கி இருந்த பாவனி ஒருவழியாக தானும் காதலிப்பதை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிபி ஜோடி நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஆஹா கல்யாணம் என்ற டாஸ்க் நடைபெற்றது. அதில் அமீர் மற்றும் பாவனி இருவருக்கும் திருமணம் நடைபெறுவது போல நடனமாடினர். இந்த நிலையில் பாவனி தனது சமூக வலைத்தளபக்கத்தில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை, அமீரின் மருத்துவ ரிப்போர்ட்டை பகிர்ந்து, உலகிலேயே நான்தான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எனக்கு மிக சிறந்த கோரியோகிராபர், மாஸ்டர் கிடைத்துள்ளார். நான் கனவில் கூட நடனமாடுவேன் என நினைத்து பார்த்ததில்லை. நான் உன்னிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.
உங்களுக்கு காலில் பிரச்சினை இருந்தும், ஓய்வெடுக்க வாய்ப்பு கொடுத்தும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் கடினமான ஸ்டெப்புகளை போட்டு நடனமாடியுள்ளீர்கள். உங்கள் மீது பெரிய மரியாதை உள்ளது என உருக்கமாக தெரிவித்துள்ளார். அந்த பதிவு வைரலான நிலையில் பலரும் அமீரை பாராட்டி வருகின்றனர்.