#Breaking: பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக - அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்.!!



 Minister SS Siva sankar on Yaar Antha Sir 09 January 2025 

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில், குற்றாவளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பின் பேரில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. மாணவி வன்கொடுமை விஷயத்தை கையில் எடுத்த அதிமுக, தொடர்ந்து நூதன முறையில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதிமுக பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம்

இந்நிலையில், அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என, அருவருக்கத்தக்க வகையிலான பதிவுகளை, இழிவான நோக்கத்துடன் வதந்தி அரசியலை எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், உண்மையில் பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக தான். 

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு; சட்டப்பேரவைக்கு வருகை தரவில்லை..!

உண்மை சந்திக்கு வந்தது

அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதிமுக வட்ட செயலாளர் சுதாகர், குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறார். இதனால் உண்மை சந்திக்கு வந்துள்ளது. அண்ணா நகர் விவகாரத்தில் மறைந்திருந்த சார், அதிமுக சார் தான். 

AIADMK

நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்

அந்த சார் அதிமுகவியராகத்தான் இருக்கிறார்கள். மக்களிடம் நாடகமாடினால் அதிமுகவினரையே புறக்கணிப்பாளர்கள். அண்ணா பல்கலை., விவகாரத்தில் வேண்டும் என்றே, திசை திருப்பும் எண்ணத்துடன் இபிஎஸ் செயல்பட்டு இருக்கிறார். சொந்த கட்சிக்காரரை காப்பாற்றவே எடப்பாடி பழனிச்சாமி முயலுகிறார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான, பெண்கள் பாதுகாப்பு நிறைந்த ஆட்சி. இந்த ஆட்சியில் பெண்களுக்கு துன்பம் இழைப்போர் யாராக இருந்தாலும் தப்பிக்க இயலாது" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "தப்பு இருக்குது, பயம் இருக்குது" - எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்.!