#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாட்ஷா, படையப்பாவுக்கு அடுத்து பேட்ட தான்! 20 வருடங்களுக்கு பிறகு மரண மாஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரையுலக வரலாற்றில் இன்றும் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் திரைப்படங்கள் பாட்ஷா மற்றும் படையப்பா. இந்த படங்களுக்கு இணையாக இதுவரை ரஜினிக்கு எந்த படங்களும் வெளியானதில்லை. ஆனால் இதனை பேட்ட பூர்த்தி செய்துள்ளது என ரஜினி ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன் நடிப்பில் பாட்ஷா திரைப்படம் 1995ஆம் ஆண்டு வெளியானது. மும்பை தாதாவாக மற்றும் ஆட்டோ ஓட்டுனராக ரஜினி நடித்த இந்த திரைப்படம் அவரது திரையுலக வரலாற்றில் மாஸான திரைப்படம் என்ற பெருமையை இன்றுவரை தக்கவைத்துள்ளது.
பின்னர் அதற்கு அடுத்தபடியாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படம் படையப்பா. 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினி உடன் சிவாஜிகணேசன், ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன் போன்றோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
அதன்பிறகு இந்தப் படங்களுக்கு இணையாக இதுவரை ரஜினிக்கு எந்த படங்களும் வெளியாகவில்லை. கபாலி, காலா போன்ற திரைப்படங்கள் இவர்களுக்கு இணையாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது.
இந்நிலையில் ரசிகர்களின் இந்த 20 வருட கனவை நினைவாக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பாட்ஷா, படையப்பா திரைப்படங்களுக்கு அடுத்தது பேட்ட தான் என சொல்லுமளவிற்கு மரண மாஸாக உருவாக்கப்பட்டுள்ளது பேட்ட. ரஜினி இளமை தோற்றத்தில் 1990-களில் நடித்த படங்களை ரசிகர்களுக்கு நினைவூட்டியுள்ளார். அவரது துள்ளலான நடிப்பால் ரஜினி ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.