பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி மெலோடி ஷோ நடத்திய கீர்த்தி சுரேஷ்.! வைரல் புகைப்படங்கள்.!
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் 2000 களில் குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இவர்.
அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா மற்றும் சூப்பர் ஸ்டார் நடித்த அண்ணாத்த போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். சமீபகாலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநதி திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தற்போது இவர் நடித்து வெளியான தசரா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து தெலுங்கு படங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார் இவர்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் பகிர்ந்திருக்கும் புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி இருக்கிறது. பச்சை நிற ஸ்லீவ்லேஸ் உடையில் இருக்கும் கீர்த்தியின் புகைப்படங்களை ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்.