கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஆசை வார்த்தைகள் கூறி பிளஸ் 1 மாணவி பலாத்காரம்... 24 வயது இளைஞர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!!
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 24 வயது இளைஞரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவியுடன் காதல்
புதுச்சேரி மாநிலம் சுத்துக்கேணி பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பவரது மகன் சாரதி(24). இவர் விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே உள்ள கிராமத்தை பிளஸ் 1 மாணவியை காதலித்து வந்திருக்கிறார். காதலர்கள் இருவரும் தனிமையில் பல இடங்களுக்கு சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
ஆசை வார்த்தைகளை கூறி பலாத்காரம்
மேலும் இளைஞர் சாரதி, மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை உல்லாசமாக இருந்திருக்கிறார். இந்நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. இது தொடர்பாக மனைவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் சோகம்... 17 வயது சிறுமியின் உயிரை பறித்த நட்பு... எமனாக வந்த காதல்.!!
போக்சோ சட்டத்தில் கைது
இதனைத் தொடர்ந்து கோட்டகுப்பம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி விசாரணை நடத்தியதில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவரது மகன் சாரதி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இளைஞர் சாரதியை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இளம்பெண் பாலியல் பலாத்காரம்... 75 வயது முதியவர் கைது.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!