கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பிளஸ் 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.!! வரலாற்று ஆசிரியர் கைது.!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வரலாற்று ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை ஆசிரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வரலாற்று ஆசிரியர்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் சக்திவேல் என்பவர் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மாணவர்களுக்கு பாலியல் தொல்லை
இந்நிலையில் ஆசிரியர் சக்திவேல் அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 3 மாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குடும்ப தகராறில் மனைவி கொடூர கொலை.!! தப்பியோடிய ஜோதிடருக்கு வலை வீச்சு.!!
ஆசிரியர் கைது
இதனையடுத்து குழந்தை நல அலுவலரிடம் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை குறித்து முறையிட்டனர். இதன் பிறகு குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியர் சக்திவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மது பழக்கத்திற்கு அடிமையானதால் ஆத்திரம்.!! மகனை அடித்து கொலை செய்த தந்தை.!!