கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
திருச்சியில் அதிர்ச்சி... பொது இடத்தில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்.!! இளைஞர் கைது.!!
திருச்சி நகரில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண்ணிற்கு பாலியல் சீண்டல்
திருச்சி, ஜீயபுரம் அருகே உள்ள பாப்பாத்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி நிவேதிதா. நேற்று பாப்பாத்தி நகர் சாலையில் நிவேதிதா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் நிவேதிதாவிடம் பாலியல் ரீதியாக சீண்டி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த நிவேதிதா இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி
நிவேதிதாவின் புகாரைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அறியாவூர் பகுதியைச் சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கள்ள உறவுக்காக நண்பன் கொலை.!! மனைவி, கள்ளக்காதலன் கைது.!!
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காவல்துறை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் பெண்களும் தங்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக அச்சமின்றி காவல் துறையிடம் புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: துணை முதல்வர் உதயநிதி முன் பிழையுடன் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து; எல்.முருகன், அதிமுக கண்டனம்.!