பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடப்பாவமே.. கணவருக்காக விரதமெல்லாம் இருந்த கவர்ச்சி நடிகைக்கா இந்த நிலைமை! இப்படி கொடூரமா செஞ்சுட்டாரே! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிரபல மாடல் அழகியும், கவர்ச்சி நடிகையுமான பூனம் பாண்டே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது நீண்டநாள் காதலரான சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் திருமணமாகி இரண்டு வாரம் கூட ஆகாத நிலையில், திடீரென அவர் தனது கணவர் சாம் பாம்பே தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர். ஆனால் சிலநாட்களிலேயே அவர் கணவருடன் சமாதானமாகி அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அண்மையில் கூட அவர் கணவர் நலமுடன், நீண்ட ஆயுளுடன் இருக்க மனைவிமார்கள் செய்யும் கர்வா சவுத் விரதத்தை மேற்கொண்டுள்ளார். மேலும் அந்த வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவர்களுக்குள் தற்போது மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது.
சாம் பாம்பே நடிகை பூனம் பாண்டேவை கொடூரமாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. பூனம் கண் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம். இந்நிலையில் பூனம் பாண்டேவை தாக்கியதற்காக சாம் பாம்பேவை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.