#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிகில் படத்தை தொடர்ந்து நம்ம சூப்பர் சிங்கர் பூவையாருக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!
பிரபலதனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பை பெட்ரா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் கப்பீஸ் என்கிற பூவையார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் கானா பாடல்கள் பாடுவதில் வல்லவர்.
மேலும் இவர் தனது பேச்சாலும், பாடல்கள் மூலமும் மக்கள் மனதில் இடம் பிடித்து தமிழகத்தின் செல்ல பிள்ளையாக திகழ்ந்து வருகிறார். பூவையார் சூப்பர் சிங்கர் சீசன் 6 ஜீனியர்களுக்கான போட்டியில் கலந்துகொண்டு, ஏரளமான பாடல்களை பாடி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை வென்றுள்ளார்.
மேலும் பூவையர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் பட்டிதொட்டியெல்லாம் பெரும் வரவேற்பை பெற்ற வெறித்தனம் பாடலை விஜய்யுடன் இணைந்து பாடியுள்ளார். அதனை தொடர்ந்து விஜய்யின் 64வது படத்திலும் அவர் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தநிலையில் மாபெரும் பிரபலமாக ஜொலித்து வந்த பூவையாருக்கு தற்போது புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது பூவையார் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதியின் பாடல் ஒன்றில் பாடியுள்ளாராம். இதனை ஆதியே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Big fan of this little guy here ❤️ I promised him, i’ll make a single with him & its done 😊 pic.twitter.com/UJhxTk43Ro
— Hiphop Tamizha (@hiphoptamizha) November 23, 2019