பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிரபல விஜய் டிவிக்கு தாவிய சன் டிவி சீரியல் ஹீரோ....! அட யாருனு பார்த்தீங்களா...
சன் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் தொடர் பூவே உனக்காக. இந்த தொடரில் ஹீரோவாக கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அருண். அவர் கடந்த வருடம் ஜூன் மாதம் சில காரணங்களால் சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக அசீம் ஹீரோவாக தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் சன் டிவி தொடரில் இருந்து வெளியேறிய அருண் ஒரு வெப் சீரிஸில் நடித்துள்ளார். அது ஒரு பிரபல ஓடிடியில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தற்போது அருண் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நம்ம வீட்டு பொண்ணு தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க களமிறங்கி உள்ளார். அதை அவரே இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருக்கிறார்.