"பிசினஸ் டுடே பத்திரிக்கையின் சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இடம் பிடித்த நயன்தாரா!"



Powerfull women entrepreneurs name list

2005ம் ஆண்டு சரத்குமாருக்கு ஜோடியாக "ஐயா" படத்தில் அறிமுகமானார் நயன்தாரா. தொடர்ந்து சந்திரமுகி. சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன், ஈ, சிவாஜி, பில்லா, யாரடி நீ மோகினி, குசேலன், சத்யம், ராஜா ராணி, தனி ஒருவன், நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Nayan

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த நயன்தாராவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர், "பெரிய கனவு காண எனக்கு கற்றுக்கொடுத்த என் அன்பான கணவர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி. இந்த மரியாதைக்கு பிசினஸ் டுடேவுக்கும் நன்றி" ஏன்னு பதிவிட்டுள்ளார்.

​​​Nayan

படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நயன்தாரா, அழகு சாதனப் பொருட்கள் மற்றும் லிப் பாம், சானிடரி பேட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் பிசினஸ் டுடே பத்திரிக்கையின் சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் நயன்தாராவும் இடம் பெற்றுள்ளார்.