#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாகுபலியை தொடர்ந்து, மிக பிரமாண்டமாக அதிரடி காட்டவிருக்கும் பிரபாஸ்! செம மிரட்டலாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிரம்மாண்டமான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் சாஹோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கில் உருவான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அதனைத்தொடர்ந்து பிரபாஸின் 20வது படமான ராதே ஷ்யாம் என்ற திரைப்படத்தை கே.கே ராதாகிருஷ்ணா இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதனை தொடர்ந்து பிரபாஸின் 21-வது படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷின் மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கவுள்ளார். இதில் தீபிகா படுகோனே பிரபாஸ்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது பிரபாஸின் 22வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஆதிபுருஷ் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தை ஓம் ராவத் இயக்கவுள்ளார். மேலும் வரலாற்று கதையம்சம் கொண்ட இந்த படம் தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் டப்பிங் செய்யப்படஉள்ளதாகவும், படம் முழுவதும் 3டியில் உருவாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.