#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அம்மாடியோவ்.. ஆதிபுருஷ் படத்திற்காக பிரபாஸ் வாங்கிய சம்பளம் இவ்வளவா! கேட்டா தலைசுற்றி போயிருவீங்க!!
தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து நாடு முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்ற பிரம்மாண்ட சூப்பர்ஹிட்டான பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். மேலும் இப்படத்திற்கு பிறகு அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் கைவசம் தற்போது அடுத்தடுத்ததாக ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற பிரம்மாண்ட படங்கள் உள்ளன. ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சைஃப் அலி கான், கிருத்தி சனோன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சரித்திர கதை என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஆதிபுருஷ் படத்திற்காக பிரபாஸ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகும் ஆதிபுருஷ் படத்தில் நடிக்க பிரபாஸ் ரூ.150 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வைரலாகி அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.