#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நயன்தாராவிற்கு வில்லனாகும் பிரபல சீரியல் நடிகர்! யாருனு தெரிஞ்சா நீங்களே ஷாக்காகிருவீங்க!!
தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகிதென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . பல்வேறு சர்ச்சைகள் தன்மீது எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார் நயன்தாரா.
தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 63 படத்திலும், ரஜினிக்கு ஜோடியாக தர்பார் படத்திலும் நடித்துவருகிறார்.மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா தற்போது மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். காதல் கலந்த ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தை தியான் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார்.
மேலும் இப்படத்தில் வில்லனாக பிரபல சின்னத்திரை நடிகர் பிரஜன் நடிக்கவுள்ளார் . இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.இவர் ஏற்கனவே ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.