#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சின்னத்தம்பி நாயகன் கூறிய சந்தோசமான செய்தி.! வாழ்த்து மழையை பொழிந்த ரசிகர்கள்.!
தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இது ஒரு காதல் கதை, காதலிக்க நேரமில்லை என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகர் ப்ரஜின். அதனை தொடர்ந்து அவர் பல சீரியல்களிலும், படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் சின்னத்தம்பி சீரியலில் நடித்து வருகிறார்.
இவருக்கும் மலையாள ஆங்கரான சாண்ட்ராவுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மேலும் இவரும் சில சீரியல்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக உள்ளனர்.
இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனநிலையில் தற்போது சான்ட்ரா கர்ப்பமாக உள்ளார். அந்த மகிழ்ச்சியான செய்தியை ப்ரஜின் தண்டு இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.