வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
கர்ப்பமாக இருக்கும் போது ஏன்மா இப்படி? பகல்நிலவு சீரியல் நடிகை செய்த காரியம்! பதறிய ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து பிரபலமான தொடர்களில் ஒன்று பகல் நிலவு. இத்தொடரில் ஆரம்ப காலகட்டத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பரிச்சயமானவர்கள் அன்வர் மற்றும் சமீரா ஷெரிப். ரியல் காதல் ஜோடியான இருவரும் அதை தொடர்ந்து வெவ்வேறு தொடர்களில் நடித்தனர்.
அவர்கள் இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சமீரா தற்போது கர்ப்பமாக உள்ளார். அந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் அண்மையில் ரசிகர்களிடம் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் சமீரா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் அண்மையில் கர்ப்பமாக இருக்கும் நிலையில் மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அந்த வீடியோவை அவர் இணையத்தில் வெளியிட்ட நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள், வயிற்றில் குழந்தையுடன் ஏன்மா இப்படி என அக்கறையுடன் பதிவிட்டு வருகின்றனர்.