பாஜகவுடன் கூட்டணி வைக்க அச்சுறுத்தல்.. ஜெயலலிதா போல் தைரியமாக முடிவெடுத்தேன் - பிரேமலதா விஜயகாந்த்!



premalatha-speech-about-bjp-alliance

பாஜக எங்களை கூட்டணிக்கு வர வேண்டும் என்று அச்சுறுத்தியும், நாங்கள் தைரியமாக அதிமுக கூட்டணியில் இணைய முடிவெடுத்தோம் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் போட்டியிருக்கிறது. இதில், விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

bjp

இதனையடுத்து தற்போது தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம்  செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பொன்னேரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுகவோடு நாங்கள் கூட்டணி வைக்கக் கூடாது என்றும் பாஜக தரப்பிலிருந்து தொடர்ந்து எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. மேலும், எங்கள் வங்கி கணக்கை முடக்கப் போவதாகவும் அச்சுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

bjp

ஆனால், அதற்கெல்லாம் நாங்கள் பயப்படாமல் ஜெயலலிதா போல் தைரியமாக முடிவெடுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.