பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அதிதி ராவிடம் அந்த மாதிரி கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்கள்.. திடீரென்று முகத்தை மூடிக்கொண்டு சென்ற அதிதி ராவ்.?
கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் அதிதி ராவ். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். 'பிரஜாபதி' எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார்.
இதன் பிறகு தொடர்ந்து இந்தி மொழியில் பல திரைப்படங்கள் நடித்துள்ள அதிதி பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.
2017 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான 'காற்று வெளியிடை' திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இப்படத்திற்குப் பிறகு 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழில் இவர் நடித்துள்ள படங்கள் வெற்றி பெற்றாலும் இவரின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை என்பதால் பட வாய்ப்புகள் வருவது குறைய தொடங்கியது.
இது போன்ற நிலையில், சமீபத்தில் பத்திரிக்கையாளர் பேட்டியில் அதிதி ராவ் பல கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் நடிகர் சித்தார்த்தை காதலிக்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு முகத்தை மூடிக்கொண்டு வெட்கத்துடன் அங்கிருந்து சென்று விட்டார் என்று கூறப்படுகிறது. அதிதி மற்றும் சித்தார்த் இருவரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.