#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஹிந்தி படமெல்லாம் வேண்டாம்! விஜய்யுடன் நடிப்பதே ஆசை! பிரபல நடிகை பேட்டி!
ஒரு அடார் லவ் என்ற படத்தில், ஒரு பாடல் மூலம் மலையாளம், தமிழ், தெலுங்கு என பிரபலமானவர் நடிகை ப்ரியா வாரியார். முதல் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ப்ரியா வாரியார்.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்துள்ளார் ப்ரியா வாரியர். படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனுடன் சேர்ந்து ஒருசில சர்ச்சைகளையும் சந்தித்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா வாரியர் இனி பாலிவுட் படங்களில் நடிக்க அதிக நாட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், ஹிந்தி படத்தில் நடிப்பதைவிட ஒரு படத்திலாவது தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார் ப்ரியா வாரியார்.