எஸ்.ஜே.சூர்யா நடிகை பிரியா பவானி சங்கருடன் காதலா! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ட்விட்டர் பதிவு.



Priya s. J.suriya

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக அறிமுகமானார் எஸ்.ஜே.சூர்யா. இவர் விஜயை வைத்து குஷி திரைப்படத்தையும், தல அஜித்தை வைத்து வாலி திரைப்படத்தையும் இயக்கியவர்.

இவர் இயக்கத்தில் உருவான அந்த இரண்டு படங்களும் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். ஆனால் அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறவில்லை.

S. J. Suriya

அதன் பிறகு சிறிது காலம் இடைவெளியில் இருந்த சூர்யா மீண்டும் மான்ஸ்டர் படத்தின் மூலம் ஹுரோவாக அறிமுகமானார். அப்படம் இவருக்கு மீண்டும் வெற்றியை தேடி தந்தது. மேலும் மான்ஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். 

அதன் பிறகு மீண்டும் பொம்மை படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனால் எஸ்.ஜே.சூர்யா பிரியாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என பிரியா மறுத்து கூறியுள்ளார். 

இந்நிலையில் தற்போது எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் 
இது வதந்தி தான், இவை முட்டாள் யாரோ செய்த வேலை, அவர் என்னுடைய தோழி மட்டுமே என்று கூறியுள்ளார்.